×

கரூர் அமராவதி ஆற்றில் பைப்லைன் அமைத்து ஆயில் இன்ஜினில் ஆற்றுநீரை உறிஞ்சும் மோட்டாரை பொக்லைனில் அகற்றும் பணி

கரூர், மார்ச் 24: கரூர் அமராவதி ஆற்றில் பைப் லைன் அமைத்து ஆயில் இன்ஜின் மூலம் ஆற்று நீரை உறிஞ்சும் மோட்டார்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், கரூர் மாவட்டததில் அமராவதி ஆற்றங்கரையில் மட்டும் 269 நீர்நிலைகளில் ஆக்ரமிப்புகள் உள்ளதை கண்டறிந்தனர். இதனடிப்படையில், நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்ரமிப்பு அகற்றும் பணி நேற்று துவங்கியது.இதன் ஒரு பகுதியாக மண்மங்கலம் தாலுகா தாளப்பட்டி பகுதியில் அமராவதி ஆற்றில் குழாய் பதித்து, ஆயில் இன்ஜின் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து வந்த பணிகளை பார்வையிட்டு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அமராவதி வடிநில உதவி பொறியாளர்கள், நீர்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்ரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Karur ,Bokline ,Oil ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...